நியூஸிலாந்து துப்பாக்கிச்சூடு: வெளியான வீடியோவில் பதிவாகியிருந்தது என்ன? சமீபத்திய தகவல்கள்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

28 வயது அவுஸ்திரேலியர் ஒருவர் நியூஸிலாந்து மசூதி ஒன்றில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில், சிறுவர்கள் உட்பட 40 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Christchurch என்னும் நகரில் அமைந்துள்ள Al Noor மசூதியில் உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டது.

நேரலை வீடியோவில் பேசியபடியே துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த நபர் தன்னுடைய பெயர் Brenton Tarrant என்றும், தான் அவுஸ்திரேலியாவின் Grafton பகுதியைச் சேர்ந்தவன் என்றும் தெரிவித்துள்ளான்.

வீடியோவை காண

வீடியோவின் வன்முறை காட்சிகள் கருதி அது வெளியிடப்படாத நிலையில், அதில் என்ன பதிவாகியுள்ளது என்பது குறித்த செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

தனது காரில் வைத்திருந்த சுமார் ஆறு துப்பாக்கிகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு மசூதிக்குள் பொறுமையாக நுழைந்த Brenton, தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்களை சுடத்தொடங்கியிருக்கிறான்.

கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாறுமாறாக சுட்ட Brenton, காயப்பட்ட ஒருவர் மெல்ல தவழ்ந்து தப்பிக்க முயல, அவரை மீண்டும் சுட்டுவிட்டு அங்கேயே நின்று மீண்டும் தனது துப்பாக்கியில் குண்டுகளை நிரப்பியிருக்கிறான்.

மனித உடல்கள் மீது பல முறை நடந்து சென்ற அவன், காயத்துடன் துடித்துக் கொண்டிருந்தவர்கள் தலையில் மீண்டும் சுட்டு, அவர்கள் இறந்ததை உறுதி செய்து கொண்டிருக்கிறான்.

மீண்டும் காருக்கு வந்து துப்பாக்கி ஒன்றை எடுத்துக் கொண்டு செல்லும்போது, ஒரு பெண் தடுமாறி விழுந்து, என்னைக் காப்பாற்றுங்கள் என்று சத்தமிட, அவளை நோக்கி சென்ற Brenton, குனிந்து அந்தப் பெண்ணின் தலையில் இருமுறை சுட்டு அவளை கொன்றிருக்கிறான்.

வீடியோவை காண

பின்னர் காரில் ஏறி அந்த பெண் மீது காரை ஏற்றிக் கொண்டு செல்லும் Brenton, காரை நிறுத்தி, ஜன்னல் வழியாக இன்னொரு ஆளை சுட்டிருக்கிறான்.

அங்கே ஏராளமானோர் இருந்தார்கள், அவர்களையெல்லாம் சுட போதுமான நேரமில்லையே என்று வேறு அவன் கவலைப்பட்டிருக்கிறான்.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு தொடர்பாக இதுவரை மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களில் ஒருவர் கைது செய்யப்படும் நேரத்தில், மனித வெடிகுண்டாக செயல்படுவதற்காக குண்டுகள் அடங்கிய கோட் ஒன்றை அணிந்திருந்திருக்கிறார்.

Al Noor மசூதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட அதே நேரத்தில், அருகிலுள்ள Linwood Masjid மசூதியிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், Christchurch மருத்துவமனைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மசூதிக்கருகே நிறுத்தப்பட்டிருந்த கார்களில் பல வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேருக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் நியூஸிலாந்து பிரதமர் Jacinda Ardern தெரிவித்துள்ளதாக சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமாக எதையாவது கண்டால் உடனடியாக தகவலளிக்குமாறும் பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...