கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இளம்பெண்: பொலிசில் புகாரளிக்க சென்றபோது நடந்த கொடுமை!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் கூட்டுப்பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான ஒரு இளம்பெண், பொலிசில் புகாரளிக்க பொலிஸ் நிலையம் சென்றபோது, அங்குள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரால் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட கொடூரம் நடந்தேறியிருக்கிறது.

பாகிஸ்தானின் Uch Sharif நகரைச் சேர்ந்த ஒரு இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டார்.

அதை புகார் செய்வதற்காக அவர் பொலிஸ் நிலையம் சென்றபோது அங்கிருந்த அதிகாரி, அவளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

ஏற்கனவே உடலும் மனதும் நொந்திருந்த அந்த பெண்ணை அந்த வீட்டில் வைத்து அந்த அதிகாரி கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்.

அத்துடன் அவளை துஷ்பிரயோகம் செய்ததை தனது மொபைலில் வீடியோ எடுத்த அந்த அதிகாரி, நடந்ததை வெளியே சொன்னால் வீடியோவை வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இருந்தும், துணிந்து அந்த பெண் உயர் அதிகாரிகளிடம் புகாரளித்ததையடுத்து அந்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவிக்கிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers