இறுகும் ஈரான் உடனான மோதல்: விமான பயணிகளுக்கு அமெரிக்க விடுத்துள்ள பகீர் எச்சரிக்கை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஈரான் நாட்டுடன் மோதல் இறுகி வரும் நிலையில் பாரசீக வளைகுடா மீது பறக்கும் பயணிகள் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த எச்சரிக்கை தொடர்பில் ஏற்கெனவே குவைத் மற்றும் ஐக்கிய அமீரகம் அறிவுறுத்தியுள்ள நிலையில் தற்போது அமெரிக்க விமானிகளுக்கு அந்த நாட்டு பெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில், பாரசீக வளைகுடா மற்றும் ஓமான் வளைகுடா பகுதிகளில் பயணம் மேற்கொள்ளும் விமானிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

அமெரிக்க போர் விமானங்கள் என கருதி பயணிகள் விமானங்களை இலக்கு வைக்கப்படலாம் என அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பகுதிகளில் பறக்கும் விமானங்களில் சில வேளைகளில் தகவல் தொடர்பு சீர்குலையலாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

மேலும் தொடர்புடைய பகுதியானது பரவலாக எமிரேட்ஸ், எதிஹாத் மற்றும் கட்டார் ஏர்வேஸ் நிறுவன விமானங்கள் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் அந்த நாட்டினுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்து வந்த ட்ரம்ப் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. இந்த நிலையில் அணுஆயுத ஒப்பந்தத்தில் பிற நாடுகளின் ஆதரவுடன் ஈரான் தொடர்ந்து வருகிறது.

இதில் விதிமுறைகளை பின்பற்ற முடியாது என்று சமீபத்தில் கூறியது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், ஈரான் மோதல் அதிகமாகி உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகளையும், போர்க் கப்பலையும் அமெரிக்கா அனுப்பி வைத்தது.

வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் எழுந்திருப்பதால், ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டது.

இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெறுமா? என்ற அச்சம் நீடித்து வந்த நிலையில் ஈரானுடன் போர் செய்ய தனக்கு விரும்பமில்லை என்றும். அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளிடம் ட்ரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers