அமெரிக்கா இந்த விவகாரத்தில் நெருப்புடன் விளையாட வேண்டாம்... கடுமையான எச்சரிக்கை விடுத்த சீனா

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அமெரிக்கா நெருப்புடன் விளையாட வேண்டாம் என்று சீனா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின் முக்கிய தூதரான Wang Yi அரசுமுறை பயணமாக ஹங்கேரிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நடந்த மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட அவர், சீனா மற்றும் தைவான் ஆகியவற்றின் ஒருங்கிணைவை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

இந்த விவகாரத்தில் தலையிட யாரும் முயற்சிக்க வேண்டாம். நெருப்புடன் விளையாட வேண்டாம் என்று கூறினார்.

அதாவது அமெரிக்கா, தைவானுக்கு எம்1ஏ2டி (M1A2T) ஆப்ராம்ஸ் டாங்கிகள், ஸ்டிங்கர் ஏவுகணைகள் மற்றும் அதுதொடர்பான கருவிகளை, சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியானது.

இந்நிலையில் தான் சீனாவின் முக்கியத்தூதர் நெருப்புடன் விளையாட வேண்டாம் என எச்சரித்ததன் மூலம் அமெரிக்கா மீதான கோபத்தை, வெளிப்படுத்தியுள்ளார்.

சீனாவிலிருந்து பிரிந்து சென்றாலும் தைவான், சீனாவின் ஒரு அங்கமெனவும், அதனை சீனாவுடன் இணைப்பதே குறிக்கோள் எனவும் அந்நாட்டு அரசு கூறி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers