நடுவானில் கட்டுப்பாட்டை இழந்த விமானி.. வீட்டிற்குள் புகுந்து விமானம்: வெளியான வீடியோ

Report Print Basu in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீடு ஒன்றுக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நோவோஷ்செட்ரின்ஸ்காயாவின் செச்சினியா கிராமத்திலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிய ரக விமானம் செச்சினியா கிராமத்தில் ஒரு குடும்பம் வசித்து வந்த வீட்டின் மீது விழுந்ததை ரஷ்ய அவசர உதவி அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இந்த விமான விபத்தில் விமானி உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவிவித்துள்ளனர்

தகவல்அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமானம் மோதியதால் தீ விபத்து ஏற்படவில்லை என்று தீயணைப்பு படையின் தலைவர் கூறியுள்ளார்.

விமானம் விபத்துக்குள்ளான காரணம் குறித்து தற்போது தகவல் ஏதும் வெளியாகவில்லை, காரணத்தை கண்டறியும் பணியில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்