ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 20 பேர் பலி.. 50 பேர் படுகாயம்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஞாயிற்றுக்கிழமையன்று துணை ஜனாதிபதி வேட்பாளர் அம்ருல்லா சலே அலுவலகத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சண்டையில் குறைந்தபட்சம் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், 50 பேர் பயகாயமடைந்திருப்பதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேட்பாளர் அம்ருல்லா சலே லேசான காயமடைந்திருக்கிறார்.

இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள், சலேவின் நான்கு மாடி அலுவலகத்திற்குள் நுழைந்த மூன்று பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.

ஆறு மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டதாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நஸ்ரத் ரஹிமி தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்