இரத்தம் சொட்ட சொட்ட கழுத்தறுபட்டு நின்ற நபர்: சுற்றுலா சென்ற பிரித்தானியர்களை அதிரவைத்த காட்சி!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
183Shares

பிரித்தானியர்கள் அதிகம் சுற்றுலா செல்லும், மற்றும் வாழும் ஸ்பெயினிலுள்ள சுற்றுலாஸ்தலம் ஒன்றில், ஏராளமானோர் முன்னால், இரத்தம் சொட்ட சொட்ட கழுத்தறுபட்டு ஒருவர் நின்ற காட்சி காண்போரை அதிர வைத்தது.

ஸ்பெயினின் Costa Del Sol பகுதியிலுள்ள வீட்டின் மாடி ஒன்றில், கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில், கழுத்தறுபட்டு இரத்தம் சொட்டச் சொட்ட ஒருவர் நிற்க, அவருக்கு அருகில் கத்தியுடன் நின்ற ஒரு நபர், இந்த காட்சியை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த மக்களைப் பார்த்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.

என்ன நடந்தது, கண்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்திலிருந்து இரத்தம் வடியும் நிலையில் இருந்தவர் யார், கத்தியை வைத்திருப்பவர்தான் அவரை வெட்டினாரா என்பது போன்ற எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

அந்த பகுதியில் ஏராளமான பிரித்தானியர்கள் வசித்து வரும் நிலையில், சம்பவம் நடந்த குடியிருப்பில் வசித்த ஒரு பிரித்தானிய தம்பதி, அந்த வீட்டின் சாவியை பொலிசாரிடம் கொடுக்க, ஆயுதம் தாங்கிய பொலிசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று கத்தியுடன் நின்ற நபரை கைது செய்தனர்.

பொலிசாரைக் கண்டதும் அந்த நபர் கத்தியையும், தனது மொபைல் போனையும் மாடியிலிருந்து கீழே வீசி விட்டார்.

இதில், அந்த நபர் கைது செய்து அழைத்துச் செல்லப்படும்போது, அங்கிருந்த சுற்றுலாப்பயணிகளைப் பார்த்து நக்கலாக சிரித்தபடி, ஜாலியாக கண்ணடித்ததுதான் உச்சகட்டம்.

காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் அவரது காயங்கள் எவ்வளவு மோசமானவை, அவர் என்ன ஆனார் என்பது குறித்த விவரங்களும் வெளியாகவில்லை.

வீடியோவை காண

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்