கடுமையான நிதி நெருக்கடியில் ஐநா சபை.. இம்மாத இறுதிக்குள் தீர்ந்துவிடும்! பொதுச்செயலாளர் அதிர்ச்சி தகவல்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ஐக்கிய நாடுகள் சபை 230 மில்லியன் டொலர் நிதிப்பற்றாக்குறையுடன் செயல்பட்டு வருவதாக, ஐ.நா.பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகளுக்கு அதன் உறுப்பு நாடுகள் நிதி அளித்து வருகின்றன. ஆனால், தற்போது ஐ.நா சபை நிதி நெருக்கடியில் உள்ளதாக பொதுச்செயலாளர் அண்டோனியா குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘ஐ.நா 230 மில்லியன் டொலர் நிதி நெருக்கடியுடன் செயல்பட்டு வருகிறது. ஐ.நாவுக்கு வழங்க வேண்டிய நிதிகளை உறுப்பு நாடுகள் முறையாக செலுத்தவில்லை.

மொத்த தொகையில் 70 சதவிதம் மட்டுமே வந்துள்ளது. ஐ.நா நிதி நெருக்கடியை சந்திக்கக்கூடும் என்று இந்தாண்டு தொடக்கத்திலேயே எச்சரிக்கப்பட்டது. ஆனால் உறுப்பு நாடுகள் அதை பொருட்படுத்தவில்லை.

ஐ.நா செயலகத்தில் உள்ள 37 ஆயிரம் ஊழியர்களின் ஊதியத்தை உறுதிபடுத்தும் விதமாகவும், செலவுகளை குறைக்கும் விதமாகவும் ஐ.நா சபையின் மாநாடுகள் மற்றும் கூட்டங்களை ஒத்தி வைக்கவும், சேவைகளை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

AFP

அதேபோல் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள ஐ.நா உறுப்பினர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும், 2018-19ஆம் ஆண்டுக்கான நிதியாக 5.4 மில்லியன் டொலர் வரையறுக்கப்பட்டதாகவும், அதில் 22 சதவித பங்களிப்பை அமெரிக்கா வழங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்