அமெரிக்க தூதரகம் அருகே அடுத்தடுத்து 6 ராக்கெட்டுகள் வீசி தாக்குதல்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே 6 ராக்கெட்டுகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்க தூதரகத்திலிருந்து வெகு தொலைவில் இல்லாத பசுமை மண்டலத்தை மூன்று ராக்கெட்டுகள் தாக்கியிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தூதரகத்தை குறித்துவைத்து வீசப்பட்ட ராக்கெட்டுகள் தவறியிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய பாக்தாத்தில் ஆறு ‘கத்யுஷா’ ராக்கெட்டுகள் தாக்கியதாக ஈராக் இராணுவம் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. அவைகளில் மூன்று அமெரிக்க தூதரகத்திலிருந்து வெகு தொலைவில் இல்லாத பசுமை மண்டலத்தில் விழுந்தன.

மேலும் மூன்று அண்டை மாவட்டமான ஜாத்ரியாவைத் தாக்கியது. தாக்குதலின் விளைவாக எந்தவிதமான உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் ஏற்பட்டதாக அறிக்கையில் இல்லை.

வாஷிங்டனின் உத்தரவின் பேரில் ஈரானிய உயர் தளபதி ஒருவர் கொல்லப்பட்ட சில நாட்களில் பசுமை மண்டலத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

சனிக்கிழமையன்று அமெரிக்க தூதரகம் அருகே இரண்டு ராக்கெட்டுகள் தாக்கியதில் 5 பேர் காயமடைந்து குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்