வெளிநாடு ஒன்றில் இந்த தவறு செய்தால் 7 கோடி அபராதம்... 5 ஆண்டு சிறை! நீதித்துறை அதிரடி உத்தரவு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

எந்த மதங்களையும் அவதிக்கும் படி நடந்து கொண்டால் 7 கோடி ரூபாய் வரை அபராதம், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அபுதாபி நீதித்துறை அதிரடியாக தெரிவித்துள்ளது.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், மதம், நபி தூதர், தெய்வீக புத்தகம் அல்லது வழிபாட்டு தலம் போன்றவற்றை அவமதிக்கும் எந்தவொரு செயலும் மதத்தை அவமதிப்பதாக கருதப்படும்.

மக்களை அவர்களது ஜாதி, மதம் மற்றும் நிற அடிப்படையில் வேறுபடுத்தப்படுவதை அபுதாபி அரசாங்கம் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளதாக அபுதாபி நீதித்துறை உறுப்பினர் அமீனா அல் மஸ்ரூய் தெரிவித்துள்ளார்.

மேலும் எந்த மதத்தையும், மத நம்பிக்கைகளையும் அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டால் 7 கோடி ரூபாய் அபராதம், 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...