ஈராக்கில் மீண்டும் அமெரிக்க இராணுவ தளம் அருகே ஏவுகணை தாக்குதல்: வீரர்கள் காயம்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் மீண்டும் தாக்குதல் நடந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஈராக்கின் பாக்தாத்திற்கு வடக்கே உள்ள கேம்ப் தாஜியில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு அமெரிக்க மற்றும் அதன் கூட்டணி துருப்புக்கள் உள்ளனர்.

ஈராக்கிய பாதுகாப்புப் படையின் ஒரு வட்டாரம், குறைந்தது 5 சோவியத் தயாரிக்கப்பட்ட கத்யுஷா வகை ஏவுகணைகள் முகாமின் வாயில்களுக்கு அருகே தாக்கியதாகக் கூறியுள்ளது. பாதுகாப்பு படையை சேர்ந்த மூன்று வீரர்கள் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈராக்கிய இராணுவம் ஒரு அறிக்கையில் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. இது அமெரிக்க துருப்புக்களை மத்திய கிழக்கில் இருந்து வெளியேற்றுவதை இலக்காக கொண்டது என கூறியுள்ளது.

ஈரானிய உயர்மட்ட இராணுவ தளபதி குவாசிம் சுலைமானி, அமெரிக்க ஆளில்லா விமானத்தால் கொல்லப்பட்டதை அடுத்து, பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் ஈராக் தளத்தின் மீதான தாக்குதல் நடந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்