விமான நிலையம் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல்: மொத்த விமான சேவையும் ரத்து

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

லிபியாவில் தற்போது செயல்பட்டுவரும் ஒரே ஒரு விமான நிலையமும் திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கான நிலையில், மொத்த விமான சேவையும் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லிபியா தலைநகர் திரிப்பொலியில் அமைந்துள்ள மிதிகா விமான நிலையம் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் புதனன்று முதல் மிதிகா விமான நிலையம் காலவரையற்று மூடப்படுவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு கலவரங்களால் மூடப்பட்டிருந்த மிதிகா விமான நிலையமானது கடந்த 9 நாட்களுக்கு முன்னரே மீண்டும் செயல்பட துவங்கியிருந்தது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பேசிய தேசிய உடன்படிக்கை அரசு (ஜி.என்.ஏ) படைகளின் செய்தித் தொடர்பாளர் முகமது குனு,

இது விமான போக்குவரத்தின் பாதுகாப்பிற்கு "வெளிப்படையான அச்சுறுத்தல்" என்று முத்திரை குத்தியுள்ளார்.

ஏவுகணை தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் தகவல் ஏதும் வெளியிடப்படாத நிலையில், அடுத்த அறிவிப்பு வரும் வரை அனைத்து விமான சேவைகளையும் நிறுத்துவதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி துனிஸில் இருந்து லிபிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று தலைநகருக்கு கிழக்கே 124 மைல் தொலைவில் உள்ள மிஸ்ரதாவுக்கு திருப்பி விடப்பட்டது.

குறித்த தாக்குதலை முன்னெடுத்தது யார் என்பது உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்திடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் பல மாதங்களாக தலைநகரை முற்றுகையிட்டு வரும் இராணுவத் தளபதி கலீஃபா ஹப்தாரின் கிழக்கு சார்ந்த படைகள் மீது சந்தேகம் விழுந்தது.

திரிப்போலி மீதான ஹப்தார் முன்னெடுக்கும் தாக்குதலானது லிபியாவை குழப்பத்தில் மூழ்கடிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது,

மட்டுமின்றி 2011-ல் நடைபெற்ற கலவரத்தால் லிபியாவின் நீண்டகால தலைவர் முயம்மர் கடாபியை ஆட்சிப்பொறுப்பில் இருந்து அகற்றியதுடன் அவரது கொலைக்கும் காரணமானது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers