என் மகள் உயிருக்கு ஆபத்து!... அவளை காப்பாற்ற உதவுங்கள் என சீனாவில் ரோட்டில் நின்று கண்ணீர் விட்டு அழுத தாய்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

சீனாவில் புற்றுநோய் பாதித்த தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, காவல்துறையினரிடம் பல மணி நேரம் கண்ணீர் விட்டு மன்றாடிய சீனப் பெண்ணின் புகைப்படங்கள் வெளியாகி மனதை கலங்கடித்துள்ளது.

லூ யூஜின் (50) என்ற பெண் சீனாவில், யாங்ட்ஸ் நதியோரம் இருக்கும் பாலத்துக்கு அருகே தனது மகளுடன் வந்தார்.

நாட்டின் முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதித்திருப்பதால், போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கும் ஹுபேய் மாகாணத்தில் இருந்து வெளியேறி, புற்றுநோய் பாதித்திருக்கும் தனது மகளுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசர நிலையில் யூஜின் இருந்தார்.

இது பற்றி காவல்துறையினரிடம் எவ்வளவு எடுத்துச் சொல்லியும், அவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக, அப்பெண்ணையும், மகளையும் ஹுபேய் மாகாணத்தில் இருந்து வெளியேற அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

பின்னர் சாலையில் நின்றபடி கண்ணீர் விட்டு அழுத யூஜின் தனது 26 வயது மகளுக்கு இரண்டாம் கட்ட கீமோதெரபி கிடைக்காவிட்டால் அவரது உயிருக்கே ஆபத்து என்பதை மருத்துவ சான்றுகளை காட்டி புரியவைத்தார்.

ஆனாலும் அவர்கள் யூஜின் பேச்சுக்கு செவி சாய்க்காத நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது என்னை அனுப்பவில்லை என்றால் கூட பரவாயில்லை. எனது மகளை அழைத்துச் செல்லுங்கள் என்று கூறி கதறினார்.

இதையடுத்து, காவல்துறையினர், ஆம்புலன்ஸை வரவழைத்து, தாய் மற்றும் மகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்