கொரோனா கோரம்..! ஒரு குழந்தைக்கு அம்மாவான 28 பெண்கள்: நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் பாதிப்பால் குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட குழந்தையை 28 செவிலியர்கள் கவனித்துக்கொள்ளும் சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

சீனாவில் வுஹான் நகரில் தோன்றி கொரோனா வைரஸால் இதுவரை 362 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெப்ரவரி 2ம் திகதி மட்டும் 58 பேர் இறந்துள்ளனர்.

சுமார் 27 நாடுகளில் 17,488 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் கொரோனா வைரஸிக்கு எளிதல் பாதிக்கப்படுகிறார்கள் என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் எச்சரித்துள்ளது.

மேலும், ஆணையத்தின் தேவைக்கேற்ப தொற்றுநோய்களின் போது புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான நேரடி வருகை மற்றும் குழந்தைகளுக்கான உடல் சோதனைகள் நாடு தழுவிய அளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என அறிவித்துள்ளது.

இதனிடையே, 2 வயது சிறுவனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், குடும்பத்தினடரிமிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கு குழ்தையை யார் கவனத்துக்கொள்வார்கள் என கவலை எற்பட்டது.

அவரை கவனித்துக்கொள்வதற்காக 28 தன்னார்வ செவிலியர்களை மருத்துவமனை ஏற்பாடு செய்துள்ளது. தற்போது, 28 பேர் குழந்தையை பெற்ற தாய் போல் கவனித்து வருகின்றனர்.

இசம்பவம் தொடர்பான நெகிழ வைக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சீனா சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்