துப்பாக்கி வைத்து பிச்சையெடுக்கும் குழந்தைகள்... வைரலான புகைப்படம்! அதன் பின் தெரிந்த உண்மை

Report Print Santhan in ஏனைய நாடுகள்

மலேசியாவில் துப்பாக்கியை காண்பித்து பிச்சையெடுக்கும் குழந்தையின் புகைப்படம் வைரலான நிலையில், அது பொம்மை துப்பாக்கி எனவும், 11 குழந்தைகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் Penang-ல் இருக்கும் Taman Aman Jaya-வில் இருக்கும் போக்குவரத்து சாலையில், டிராபிக்கின் போது, ஆண் சிறுவன் ஒருவன், அங்கு நிற்கும் கார் டிரைவரிடம் துப்பாக்கியை காண்பித்து பிச்சையெடுப்பது போன்ற புகைப்படம் வைரலானது.

இதனால் பொலிசார் உடனடியாக அப்பகுதியில் பிச்சையெடுக்கும் குழந்தைகள் குறித்து விசாரித்த போது, இது சம்பந்தமாக கிழக்கு கடற்கரை Lahad Datu-ல் நான்கு பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து Lahad Datu பொலிஸ் அதிகாரி Nasri Mansor கூறுகையில், குறித்த புகைப்படம் வைரலானதால், உடனடியாக அப்பகுதிக்கு பொலிசார் விரைந்தனர். அங்கு பிச்சையெடுத்த குழந்தைகள் மற்றும் 24 முதல் 31 வயது மதிக்கத்தக்க நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

Sin Chew Daily News

இதில் கைது செய்யப்பட்ட 11 குழந்தைகளும் ஆறு மாதங்கள் முதல் 12 வயது வரையிலான உள்ளனர். அவர்கள் குடிவரவு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்