கொரோனாவுக்கான மருந்து: மனிதர்களிடம் பரிசோதித்ததில் வெற்றி- ரஷ்யாவின் அறிவிப்பு

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
393Shares

உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதித்ததில் வெற்றியடைந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 1.28 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 5.68 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வைரசுக்கு மருந்து தயாரிக்கும் முயற்சியில் உலக நாடுகள் பலவற்றின் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரஷ்யாவை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளதாக ஸ்புட்னிக் இதழில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் அந்த மருந்து மனிதர்களிடத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த தகவலை இன்ஸ்டிடியூட் ஃபார் ட்ரான்ஸ்லேஸ்னல் மெடிசன் அண்ட் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநர் வாடிம் டாரசோவ் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்