அம்மா ஓடுங்கள்... மகனுடைய சமயோகித புத்தியால் உயிர் தப்பிய தாய்: திடுக்கிடவைக்கும் வீடியோ!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
6146Shares

ஜார்ஜியாவில் இரண்டு சிறுவர்கள் தங்கள் வீட்டிலுள்ள நீச்சல் குளத்தில் விளையாடிக்கொண்டிருக்க, அவர்களது தாய் சாய்வு நாற்காலி ஒன்றில் அமர்ந்து புத்தகம் ஒன்றை படித்துக்கொண்டிருக்கிறார்.

அப்போது அந்த சிறுவர்களில் ஒருவன், அம்மா ஓடுங்கள் என சத்தமிட, எழுந்து, திரும்பிக்கூட பார்க்காமல் ஓடுகிறார் அந்த பெண்.

அவர் அங்கிருந்து நகரவும், பெரிய மரம் ஒன்று அவர் உடகார்ந்திருந்த நாற்காலியின் மீது படாரென விழுகிறது.

பயந்து ஓடிய அந்த பெண், ஒரு கணம் திரும்பி பார்த்தவர், கொஞ்சம் தாமதித்திருந்தால் தனக்கு என்ன ஆகியிருக்கும் என கற்பனை செய்து பார்த்தாரோ என்னவோ, வீட்டுக்குள்ளேயே ஒடிவிட்டார்.

இந்த காட்சி அந்த வீட்டிலிருந்த பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

திகைத்து நிற்கும் அந்த சிறுவன் பின்னர் அம்மாவைக் கண்டு அவர் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டாரா என்பதை உறுதி செய்துகொண்டு மீண்டும் வெளியே வந்து தன் சகோதரனுடன் அந்த மரத்தையே பார்த்துக்கொண்டு நிற்கிறான்.

தன் மகன் தன் உயிரைக் காப்பாற்றியதாக நெகிழும் அந்த பெண், அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட, பார்த்தவர்கள் அந்த சிறுவனை பாராட்டு மழையில் நனைத்து வருகிறார்கள்.

வீடியோவை காண

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்