ஆதிவாசிகள் நலனுக்காக பாடுபட்ட நிபுணருக்கு அமேசான் காடுகளில் வாழும் ஆதிவாசிகளாலேயே நேர்ந்த சோகம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஆதிவாசிகளை பாதுகாப்பதற்காக பாடுபட்ட நிபுணர் ஒருவரின் உயிரை ஆதிவாசிகள் எய்த அம்பே பறித்த பரிதாபம் அரங்கேறியுள்ளது.

Rieli Franciscato (56), ஆதிவாசிகள் பாதுகாப்புக்காக பாடுபட்டு வந்த ஒருவர். அரசு அதிகாரியும், அமேசான் ஆதிவாசிகள் குறித்து நன்கு அறிந்த நிபுணருமான Rieli, பிரேசிலில் அமைந்துள்ள அமேசான் காடுகளில் வாழும் ஒரு ஆதிவாசி இனத்தை சந்திப்பதற்காக தனது குழுவினருடன் சென்றுள்ளார்.

ஆனால், மக்களைக் கண்டதும் அந்த ஆதிவாசிகள் அவர்கள் மீது திடீரென அம்பெய்யத் துவங்கியுள்ளனர்.

அவர்கள் அம்பு எய்வதைக் கண்டதும் Rieliயுடன் வந்தவர்கள் வாகனம் ஒன்றிற்குப் பின்னால் பதுங்கிக்கொள்ள, ஒரு அம்பு Rieli மீது பாய்ந்துள்ளது.

சத்தமிட்ட Rieli, தன் மார்பில் பாய்ந்த அம்பை பிடுங்கி எறிந்துவிட்டு, 50 மீற்றர் தூரம் ஓடி, பின் நிலைகுலைந்து விழுந்துள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், Rieliயைக் காப்பாற்ற முடியாமல் போயிருக்கிறது.

ஆனால், பொதுவாக அந்த ஆதிவாசிகள் மக்களை இப்படி தாக்குவதில்லையாம், அவர்கள் தாக்குகிறார்கள் என்றால், அதற்கு சற்று முன்பு அங்கு ஏதோ நடந்திருக்கவேண்டும் என்கிறார் ஊடகவியலாளரான Uchida என்பவர்.

அதாவது சட்டவிரோத சுரங்கம் தோண்டுபவர்கள், வேட்டைக்காரர்கள் போன்றவர்கள் தங்கள் பகுதிக்குள் அத்துமீறி நுழையும்போது அந்த ஆதிவாசிகள் பழிவாங்க இப்படி செய்வதுண்டாம்.

ஆகவே, அப்படி ஏதோ நடந்திருக்கவேண்டும், ஆகவேதான் கோபத்தில் பழிவாங்குவதற்காக அவர்கள் தாக்கியிருக்கக்கூடும் என்கிறார் Uchida.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்