இரண்டாவது முறையாக நாடு தழுவிய முழு ஊரடங்கு: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
1742Shares

கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், இரண்டாவது முறையாக நாடு தழுவிய முழு ஊரடங்கை முதல் நாடாக அமுலுக்கு கொண்டுவந்துள்ளது இஸ்ரேல்.

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல் 24-வது இடத்தில் உள்ளது.

அங்கு கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 1.55 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

மேலும், அங்கு 1,119 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர்.

இதையடுத்து, அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு, வரும் வெள்ளிக்கிழமை முதல் 3 வார காலத்துக்கு ஊரடங்கு அமுல்படுத்த முடிவு செய்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

யூதர்களின் புத்தாண்டு தினத்திற்கு முன்னதாக, பாடசாலைகள், உணவகங்கள், ஷாப்பிங் சென்டர்கள் மற்றும் பிற வணிக வளாகங்கள், ஹொட்டல்கள் மூடப்பட்டு செயற்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் தங்கள் குடியிருப்பில் இருந்து 500 கெஜத்திற்கு வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மட்டுமின்றி குடியிருப்புக்குள் 10 பேர்களுக்கு மேல் கூட வேண்டாம் எனவும், பொது இடங்களில் 20 பேர்களுக்கு மேல் கூட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நெதன்யாகு அரசின் இந்த கடும்போக்கு நடவடிக்கைக்கு பொதுமக்களிடையே எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இருப்பினும் இரண்டாவது முறையாக நாடு தழுவிய ஊரங்கை அமுலுக்கு கொண்டுவரும் முதல் நாடாக இஸ்ரேல் உள்ளது.

இஸ்ரேலில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த அரசு எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வீட்டு வசதித் துறை அமைச்சா் யாகோவ் லிட்ஸ்மேன் ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்