பிரித்தானியா அதிகாரிகள் நாட்டிற்குள் நுழையகூடாது: பதிலடி கொடுக்கும் வகையில் தடை விதித்த பிரபல நாடு

Report Print Basu in ஏனைய நாடுகள்
248Shares

பிரித்தானியா அதிகாரிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய ரஷ்ய அரசாங்கம் தடை விதித்துள்ளது.

மாக்னிட்ஸ்கி வழக்கு தொடர்பாக லண்டனின் பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 25 பிரித்தானியா அதிகாரிகள் நுழைவதற்கு ரஷ்யா தடை விதித்துள்ளது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா தெரிவித்தார்.

பிரித்தானியா அதிகாரிகளின் நட்பற்ற நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், பரஸ்பர கொள்கையின் அடிப்படையிலும், ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள 25 பிரித்தானியா பிரதிநிதிகளுக்கு எதிராக தனிப்பட்ட தடைகளை விதிக்க ரஷ்ய தரப்பு முடிவெடுத்தது என்று ஜாகரோவா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆதாரமற்ற மோதல்களை தவிர்க்குமாறு லண்டனுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.

ரஷ்யாவிற்கு எதிரான அனைத்து நட்பற்ற நடவடிக்கைகளுக்கும் பதிலடி கொடுக்காமல் விடப்படாது என்று ஜகரோவா கூறினார்.

ஜூலை மாதம் பிரித்தானியா அரசு மாக்னிட்ஸ்கி வழக்கு தொடர்பாக பல ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்ததாக ஜாகரோவா கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்