வாழ்நாள் தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் முறையீடு

Report Print Harishan in ஏனைய விளையாட்டுக்கள்
250Shares
250Shares
ibctamil.com

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தன் மீதான வாழ்நாள் தடையை நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மீது புகார் எழுப்பப்பட்டது.

இதனையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நேரடி விசாரணைக்குள் ஸ்ரீசாந்த் கொண்டு வரப்பட்டார்.

ஸ்ரீசாந்த் மீதான குற்றம் நிரூபணம் ஆனதால் இனி பிசிசிஐ(இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) நடத்தும் எந்த கிரிக்கெட் போட்டியிலும் அவர் கலந்து கொள்ள கூடாதென வாழ்நாள் தடைவிதித்து பிசிசிஐ உத்தரவிட்டிருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், உரிய நீதி கிடைக்கவில்லை என இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் ஸ்ரீசாந்த்.

மேலும் மனுவை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, இந்த மனு மீதான வழக்கின் விசாரணை பிப்ரவரி 5-ஆம் திகதி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்