இலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டு கொலை

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்ஜய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் டி சில்வா சுட்டு கொல்லப்பட்டுள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து தனஞ்ஜய விலகியுள்ளார்.

ரஞ்சன் சில்வா தெற்கு கொழும்புவில் உள்ள Mount Lavinia நகராட்சியில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.

படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே ரஞ்சனின் உயிர் பிரிந்துள்ளது.

அவருடன் இருந்த இரண்டு பேர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற உள்ளூர் தேர்தலில் ரஞ்சன் போட்டியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் சேர்க்கப்பட்டிருந்த தனஞ்ஜய டி சில்வா தந்தையின் மரணம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...