வரம்பு மீறிய இலங்கை வீரர் அகிலா தனஞ்சயா: தடை விதித்து ஐசிசி அதிரடி

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

விதிமுறையை மீறி பந்து வீசியதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்சயாவிற்கு தடை விதித்து ஐசிசி அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அப்போது இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர், அகிலா தனஞ்சயாவின் பந்துவீச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதனையடுத்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் தனஞ்சயாவிற்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், ஐசிசி..,யால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட தனஞ்சயா, 15 டிகிரி அளவுக்கு கூடுதலாக தனது மணிக்கட்டை வளைத்து பந்து வீசியதாக தற்போது அறிக்கை வெளியாகியுள்ளது.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள ஐசிசி, தனஞ்சயா தன்னுடைய பந்து வீச்சு முறையினை மாற்றிக்கொண்டு மீண்டும் சோதனைக்கு விண்ணப்பித்து நிரூபித்த பின்னரே, சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதிக்கபடுவார் என தெரிவித்துள்ளனர்.

மேலும், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஒப்புதலுடன் அவர் உள்ளுர் போட்டிகளில் விளையாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்