இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி.. இலங்கை ஜம்பவானுக்கு அதிக வாய்ப்பு: கசிந்தது தகவல்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியன் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ரவிசாஸ்திரியின் பதவி காலம் முடிவடைந்து விட்ட நிலையில் அடுத்தது பயிற்சியாளர் பதவிக்கு யார் வரப்போகிறார் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி கிருஷ்ணன் விண்ணப்பித்துள்ளார். மேலும், இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனே மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோரும் இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

கபில்தேவ் தலைமையிலான குழு கலந்து ஆலோசித்து முடிவெடுக்கும் என பிசிசிஐ அறிவித்திருந்தது. ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டு வாரங்களுக்குள் இப்பதவி யாருக்கு என்பது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்பதவிக்கு இலங்கை ஜம்பவான் ஜெயவர்தனே வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015 ஆம் ஆண்டு தனது பயிற்சியாளர் பணியை துவங்கிய ஜெயவர்தனே, இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆலோசகராக பணிபுரிந்துள்ளார். மேலும் 2016ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்