டோனி ஓய்வு... இவர்கள் கையில் தான் இருக்கிறது.. இது மட்டும் தான் பதில் செல்லும்: கங்குலி ஓபன் டாக்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் டோனி ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக உணர்ந்தாரா என்றும், அவர் ஓய்வு பெறுவது குறித்த முடிவை பரிசீலிக்க வேண்டுமா என்றும் கேட்க்கப்பட்ட கேள்விக்கு முன்னாள் இந்திய அணித்தலைவர் சவுரவ் கங்குலி பதிலளித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் குறித்த கேள்விக்கு பதிலளித்த கங்குலி கூறியதாவது, டோனி ஓய்வு பெறுவது அணி நிர்வாகத்தைப் பொறுத்தது, நிலைமையை அவர்கள் எவ்வாறு கையாள விரும்புகிறார்கள் என்பது தான். ரிஷாப் பந்த் அணியில் சிறப்பாக இடம்பிடித்துள்ளார், மேலும் தேர்வாளர்கள் எதிர்காலம் குறித்து என்ன திட்டம் வைத்துள்ளார்கள் என்பதைப் பொறுத்தது.

டோனி ஓய்வு பெறுவது குறித்து உண்மையை சொல்ல வேண்டும் என்றால், எனக்குத் தெரியாது. அது அணி நிர்வாகம், தேர்வாளர்கள் நினைக்கும் விதம் ஆகியவற்றைப் பொறுத்தது.

உண்மையில், டோனி இப்போது இளமையாக இல்லை, எனவே ஓய்வு முடிவு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு கட்டத்தில் வருகிறது. எனவே, என்ன நடக்க போகிறது என்பதைப் புரிந்துகொள்ள இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

ரிஷாப் அணியில் இடம்பிடித்து நன்றாக விளையாடுகிறார். இவை அனைத்தும் தேர்வாளர்களின் மனநிலையையும் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் பொறுத்தது. அவர்கள் எதிர்காலத்திற்காக வைத்திருக்கும் வியூகத்தை பற்றியது. இதற்கு நேரம் மட்டும் தான் பதில் சொல்லும் என கங்குலி கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்