‘நாக்-அவுட்’.. மேடையிலே சுருண்டு துடித்த அமெரிக்க குத்துச்சண்டை வீரர் பலி: இறுதி நிமிட காட்சி

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

அமெரிக்காவில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம் வீரர் உயிரிழந்தார்.

கடந்த சனிக்கிழமை Chicago-வில் நடந்த light middleweight குத்துச்சண்டை போட்டியில் Charles Conwell- Patrick Day மோதினார். 10வது சுற்றில் Patrick-ஐ Conwell நாக் அவுட் செய்து வெற்றிப்பெற்றார்.

மேடையிலே சரிந்து துடித்த Patrick விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மூளையில் பலத்த காயம் ஏற்பட்ட Patrick கோமா நிலைக்கு சென்றார். எனினும், அவரை பிழைக்க வைக்க மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், Patrick உயிரிழந்ததை அவரின் செய்தி தொடர்பாளர் Lou Di Bella உறுதி செய்தார். அமெரிக்காவைச் சேர்ந்த Patrick-க்கு பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இச்செய்தியை கேட்டு தான் மிகுந்த துயரமடைந்ததாக எதிர் போட்டியாளர் Conwell தெரிவித்துள்ளார். வெற்றி பெறுவதே எனது நோக்கமே தவிர, இதுபோன்ற துரதிஷ்டவசமான நிகழ்வு ஏற்படும் என தான் நினைத்து கூட பார்க்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்