6வது முறையாக 'பாலன் டி ஓர்' விருது வென்று மெஸ்சி அசத்தல்: குவியும் வாழ்த்து மழை!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் 'பாலன் டி ஓர்' விருதை 6 வது முறையாக வென்று பார்சிலோனா நட்சத்திரம் மெஸ்சி சாதனை படைத்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் பிரான்ஸ் ஃபுட்பால் என்கிற பத்திரிகை சார்பில் 1956 முதல் ஆண்டுதோறும் 'பாலன் டி ஓர்' என்கிற விருது வழங்கப்பட்டு வருகிறது.

பல்வேறு மக்களின் வாக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் இந்த விருதினை, பார்சிலோனா நட்சத்திரம் மெஸ்சி கடந்த 2009ம் ஆண்டு முதன்முறையாக பெற்றார்.

அதனை தொடர்ந்து 10ஆண்டுகளாக மெஸ்சி மற்றும் ரொனால்டோ மட்டுமே மாறிமாறி இந்த விருதை பெற்று ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

கடந்த 2018ம் ஆண்டு ரியல் மாட்ரிட்டின் வீரர், லூகா மோட்ரிக் இதனை உடைத்து பாலன் டி'ஓர் விருதை கைப்பற்றினார்.

இந்த நிலையில் திங்களன்று பாரிஸில் நடந்த விருது வழங்கும் விழாவில், மூன்று வருடங்களுக்கு பிறகு 6வது முறையாக மீண்டும் லியோனல் மெஸ்சி வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் கூட, விளையாட்டில் மெஸ்சியின் பரம எதிரியான ரொனால்டோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேபோல மகளிருக்கான பிரிவில் அமெரிக்காவின் மேகன் ரேப்பினோ பலோன் டி ஆர் விருதை வென்றார். அவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்