விக்கெட் எடுத்ததை மேஜிக் செய்து கொண்டாடிய பந்துவீச்சாளர்: வியக்க வைக்கும் வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்
331Shares

தென்னாப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் தப்ரைஸ் ஷம்ஸி, விக்கெட் எடுத்ததை மேஜிக் செய்து கொண்டாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

டிசம்பர் 4ம் திகதி புதன்கிழமையன்று, போலந்து பூங்காவில் டர்பன் ஹீட் அணிக்கு எதிராக பார்ல் ராக்ஸ் அணியில் விளையாடிக் கொண்டிருந்த ஷம்ஸி - தனது விக்கெட்டுகளில் ஒன்றைக் கொண்டாட அற்புதமான மேஜிக் தந்திரத்துடன் வெளியே வந்து ரசிகர்களை திகைக்க வைத்தார்.

போட்டியின் எட்டாவது ஓவரில் ஷம்ஸி வீசிய பந்தினை, விஹாப் லுபே மைதானத்திற்கு வெளியே தூக்கி அடிக்க முயற்சித்தார். ஆனால் துரதிஷ்டிரவசமாக அந்த பந்து ஹார்டஸ் வில்ஜோயனின் கைகளில் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்தது.

இதனை கொண்டாடும் விதமாக ஷம்ஸி தன்னுடைய சட்டைப்பையில் இருந்து ஒரு துணியை எடுத்து, அதனை குச்சியாக மாற்றி மேஜிக் செய்தார். அங்கிருந்த ரசிகர்கள் அனைவருமே அதனை பெரும் ஆச்சர்யத்துடன் பார்த்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்