ரோகித் சர்மா விடயத்தில் சுத்தமாக தெளிவில்லை! மனைவி பிரசவத்துக்காக அணியில் இருந்து விலகும் கோஹ்லி வருத்தம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
1054Shares

ரோஹித் சர்மா காயமடைந்த விடயத்தில் சுத்தமாகத் தெளிவில்லாத நிலை நிலவுகிறது என விராட் கோஹ்லி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

ஒருநாள், டி20, டெஸ்ட் எனப் பல போட்டிகளில் ஆடவுள்ளது. கோஹ்லியின் மனைவி கர்ப்பமாக இருப்பதால், முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு குழந்தை பிறக்கும் நேரத்தில் மனைவியுடன் இருக்க அவர் இந்தியா திரும்புகிறார். இதனால் ரோஹித் சர்மா அணிக்குத் தலைமை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ரோஹித் சர்மா காயம் காரணமாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோஹ்லி கூறுகையில், துபாயில் தேர்வுக்குழு கூட்டத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன், ஐபிஎல் ஆடும்போது ஏற்பட்ட காயத்தினால் ரோஹித்தால் விளையாட முடியாது என்று எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் சொல்லப்பட்டது. 2 வார கால ஓய்வு மற்றும் சிகிச்சை அவருக்குத் தேவை என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்தக் காயத்தின் தன்மை என்ன என்பதும் ரோஹித்திடம் விளக்கிச் சொல்லப்பட்டதாகவும், அவரும் அதை ஏற்றுக்கொண்டார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அந்தச் செய்தி எங்களுக்கு வந்த பின் ரோஹித் ஐபிஎல்லில் தொடர்ந்து ஆடினார். அங்கிருந்து எங்களுடன் அவர் அவுஸ்திரேலியா வருவார் என்று நினைத்தோம். ஆனால், அவர் வரவில்லை. அவர் ஏன் எங்களுடன் பயணப்படவில்லை என்பதற்கான காரணமும் சொல்லப்படவில்லை.

அதன் பிறகு, அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கிறார் என்றும், டிசம்பர் 11ஆம் திகதி மீண்டும் அவர் நிலை ஆய்வு செய்யப்படும் என்றும் மின்னஞ்சல் வந்தது. இந்த விஷயத்தில் போதிய தெளிவு இல்லவே இல்லை. நாங்கள் காத்திருக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இது சரி என்று நான் நினைக்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்