யாழ் மாவட்ட ரீதியிலான கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் ஆவ­ரங்­கால் மத்­தி சம்பியன்!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

அச்­சு­வேலி பொலிஸ் பிரி­வால் நடத்­தப்­பட்ட கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் ஆவ­ரங்­கால் மத்­திய அணி கிண்­ணம் வென்­றது.

புத்­தூர் கலை­மதி விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் அண்­மை­யில் இடம்­பெற்ற இந்த இறு­தி­யாட்­டத்­தில் ஆவ­ரங்­கால் மத்­திய விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து ஆவ­ரங்­கால் இந்து இளை­ஞர் விளை­யாட்­டுக் கழக அணி பலப்­ப­ரீட்சை நடத்­தி­யது.

முத­லா­வது செற்றை 25:23 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்­றி­யது இந்து இளை­ஞர் அணி.

எனி­னும் இரண்­டா­வது மற்­றும் மூன்­றா­வது செற்­களை முறையே 25:10, 25:21 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்றி 2:1 என்ற செற் கணக்­கில் முன்­னிலை பெற்­றது ஆவ­ரங்­கால் மத்தி.

நான்­கா­வது செற்றை 25:22 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்­றி­யது இந்து இளை­ஞர்.

முதல் நான்கு செற்­க­ளின் நிறை­வில் இரண்டு அணி­க­ளும் தலா 2 செற்­க­ளைக் கைப்­பற்­றி­யி­ருந்­தன.

இறுதி செற்­றில் வெற்­றி­பெ­றும் அணியே சம்­பி­யன் என்ற நிலை­யில் 15:10 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­மை­யில் கைப்­பற்றி கிண்­ணம் வென்­றது ஆவ­ரங்­கால் மத்­திய விளை­யாட்­டுக் கழக அணி.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்