நீங்கள் பகிரும் செல்பியால் உங்கள் சொத்தையே எழுதி வாங்கலாம்: அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in ஏனைய தொழிநுட்பம்
219Shares
219Shares
lankasrimarket.com

உலகளவில் செல்பி மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

செல்பி புகைப்படங்களை எடுத்து அதை உடனடியாக சமூகவலைதளங்களில் பதிவிடுவதை பலர் வழக்கமாக வைத்துள்ளார்கள்.

உயரமான இடங்கள் மற்றும் ரயில் தண்டவாளம் அருகில் என செல்பி எடுத்தவர்கள் பலர் உயிரிழந்த கதைகளும் உண்டு.

இது நம்மில் பலருக்கு தெரிந்திருந்தாலும் நமது செல்பியை சமூக விரோதிகள் எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

அதாவது வெற்றியை குறிக்கும் வகையில் இளைஞர்கள் அடிக்கடி விரல்களை V வடிவில் காட்டி செல்பி எடுக்கிறார்கள்.

சிலர் இந்த புகைப்படங்களை எடுத்து, அதில் நமது விரல்களில் காணப்படும் ரேகைகளை துல்லியமாக காட்டும் தொழில்நுட்ப உதவியுடன் பதிவு செய்து செயற்கை முறையில் நமது கை ரேகையை தயாரித்துவிடலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

இப்படி செயற்கையாக தயாரிக்கப்படும் கைரேகை மூலம் நமது முழு விவரத்தையும் கண்டுப்பிடிக்க முடியும்.

ஒரு வேளை தம்ஸ்-அப் போல் விரல்களை மடக்கி கட்டை விரலை உயர்த்தும் செல்பியில் உங்கள் கட்டை விரல் ரேகையை நமது விரோதிகள் எடுத்து போலி கைரேகை தயாரித்து நமது சொத்துக்களை கூட அவர்கள் பெயருக்கு மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்