மிகவும் எளிமையான வசதிகளுடன் அறிமுகமாகியது ஸ்கைப்பின் புதிய பதிப்பு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
134Shares
134Shares
lankasrimarket.com

ஒரு காலத்தில் இணையத்தினூடான வீடியோ அழைப்பு வசதி மற்றும் குரவல் வழி அழைப்பு வசதிகளை தரும் ஸ்கைப் கொடிகட்டிப் பறந்தது.

எனினும் வாட்ஸ் ஆப், வைபர் என்பவற்றின் வருகையை தொடர்ந்து ஸ்கைப்பின் பாவனை குறையத்தொடங்கியது.

இவ்வாறான நிலையில் தற்போது ஸ்கைப்பின் புதிய பதிப்பு ஒன்றினை மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இப் புதிய பதிப்பான வழமைக்கு மாறாக மிகவும் எளிமையான வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பயனர்களுக்கு இடர்களை ஏற்படுத்தக்கூடிய வசதிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இதன்படி மூன்றே மூன்று பொத்தான்கள் தரப்பட்டுள்ளன.

Chats, Calls மற்றும் Contacts ஆகிய பொத்தான்களே அவையாகும்.

Highlights மற்றும் Capture போன்ற வசதிகள் நீக்கப்பட்டுள்ளன.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்