மிகவும் சிறிய என்ஜினை (Engine) உருவாக்கி சாதனை

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

உலகிலேயே மிகவும் சிறிய என்ஜின் ஒன்றினை உருவாக்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

டல்பினில் உள்ள ட்ரினிட்டி கல்லூரியைச் சேர்ந்த பௌதிகவியலாளர்களே இச் சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

இந்த என்ஜினானது ஒரு தனியான கல்சியம் அயனின் அளவினை ஒத்ததாக இருக்கின்றது.

அதாவது சாதாரண வாகனம் ஒன்றின் எனிஜினை விடவும் 10 பில்லியன் மடங்கு சிறியதாகும்.

இது லேசர் கற்றையிலிருந்து வெளியேறும் வெப்பத்தினை அதிர்வாக மாற்றி செயற்படக்கூடியது.

இந்த என்ஜினை எதிர்காலத்தில் நனோ தொழில்நுட்பங்களில் பயன்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்