பேஸ்புக் உடனான உறவை துண்டிக்கும் பேபால்: காரணம் என்ன தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

சமூகவலைத்தள சேவையை வழங்குதவற்காக உருவாக்கப்பட்ட பேஸ்புக் நிறுவனம் தற்போது அதனைத் தாண்டி பல்வேறு தொழில்நுட்பத் துறைகளில் காலடி பதித்து வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக தற்போது கிரிப்டோ கரன்ஸி எனப்படும் டிஜிட்டல் நாணய வடிவமைப்பிலும் காலடி பதிக்க தயாராகியுள்ளது.

இதற்காக Libra எனப்படும் அமைப்பு உருவாக்கப்பட்ட பேபால் போன்ற நிறுவனங்களும் அவ் அமைப்பினுள் உள்ளீர்க்கப்பட்டிருந்தன.

எனினும் 28 அங்கத்தவர்களைக் கொண்ட இந்த அமைப்பிலிருந்து பேபால் நிறுவனம் விலகவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கான காரணத்தை தெரிவிக்காத நிலையில் தாம் தொடர்ந்தும் தமது டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவையினை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை அடுத்த வருடம் தனது டிஜிட்டல் கரன்ஸினை பேஸ்புக் அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்