தோல்வியில் முடிந்த முதல் காதல்! பேட்டி எடுத்த பெண்ணால் கவரப்பட்ட ரஜினிகாந்த்: சுவாரசிய கதை

Report Print Deepthi Deepthi in உறவுமுறை
624Shares
624Shares
ibctamil.com

தமிழக அரசியலில் காலடி வைத்துள்ள நடிகர் ரஜினிகாந்த், சினிமா வாழ்க்கையில் வெற்றிகரமான மனிதர் மட்டுமின்றி தனது குடும்ப வாழ்க்கையிலும் வெற்றிகரமான மனிதர்தான்.

இவரின் அரசியல் பயணம், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ள நிலையில், தற்போது நடக்கும் அரசியல் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் தனது கட்சிப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவரது அரசியல் பயணத்திற்கு இவரது குடும்பத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தனது கணவர் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம் என ரஜினியின் மனைவி லதா கூறியுள்ளார்.

இத்தனை ஆண்டுகால தனது கணவரின் சினிமா வாழ்க்கைக்கு பக்கபலமாக இருந்த லதா, தற்போது அரசியல் வாழ்க்கைக்கும் துணையாக இருப்பார் என கூறப்படுகிறது.

சிறுவயதிலேயே தாயை இழந்த ரஜினிகாந்துக்கு முன்னின்று தனது மகளை திருமணம் நடத்தி வைத்தது லதாவின் தாய்தான். இதனை எம்ஜிஆர் சிலை திறப்பின்போது நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

எத்திரராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து வந்த லதாவிற்கு தனது கல்லூரியின் சார்பில் ஒரு வேலை கொடுக்கப்பட்டது. அது, முன்னணி நடிகரான ரஜினிகாந்தை பேட்டி எடுக்க வேண்டும் என்பதுதான்.

தில்லு முல்லு படப்பிடிப்பில் ரஜினிகாந்த் இருந்தபோதுதான், லதா அவரை முதல் முறையாக நேரில் சந்தித்துள்ளார்.

பேட்டியின் போது பல்வேறு கேள்விகளை லதா கேட்டுள்ளார். இது ரஜினிகாந்திற்கு பிடித்துள்ளது. பேட்டியின் போதே தனது காதலை சொல்லாத ரஜினி, நேரடியாக என்னை திருமணம் செய்துகொள்கிறாயா? என கேட்டுள்ளார்.

இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத லதா, நான் எனது வீட்டில் கேட்டுவிட்டு சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதன்பின்னர் தான் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணன் லதாவின் பெற்றோரை சந்தித்து, திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார். இந்த திருமணத்தை லதாவின் தாயே முன்னின்று நடத்தி வைத்துள்ளார்.

1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் திகதி இருவரும் திருப்பதி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

எல்லோருக்கும் முதல் காதல் என்பது மற்க்க முடியாது ஒன்று. அப்படியொரு காதல் ரஜினியின் வாழ்க்கையிலும் இருந்துள்ளது.

பள்ளிப்பருவத்தில் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். ஆனால் அது தோல்வியில் முடிந்துவிட்டதாக சமீபத்தில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் ரஜினி தெரிவித்தார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்