சிறப்பாக நடைபெற்ற வாழைச்சேனை கிண்ணையடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்

Report Print Reeron Reeron in மதம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை கிண்ணையடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரமோட்சவத்தின் இறுதி நாளாகிய இன்று தீர்த்தோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

குறித்த ஆலயத்தின் பிரமோற்சவமானது வைகாசி முதலாம் திகதி ஆரம்பமானதுடன், தீர்த்தோற்சவமானது கிண்ணையடி வாவிக்கரையில் இடம்பெற்றது.

இதன்போது அதிகளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து விசேட பூஜைகளில் கலந்து கொண்டதுடன், வாவிக்கரையில் இடம்பெற்ற விநாயகப் பெருமானின் தீர்த்தோற்சவத்திலும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை கிண்ணையடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு கடந்த வருடம் கும்பாபிஷேகம் இடம்பெற்றதுடன், இம்முறை பிரமோற்சவ பெருவிழா இடம்பெற்றிருந்தது.

இன்றைய தீர்தோற்சவப் பெருவிழாவின் அனைத்தும் பூஜைகளும் உற்சவ கால பிரதம குரு சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியாரின் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Like This Video...

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments