பூமியை நோக்கி வரும் சீன விண்வெளி நிலையம்

Report Print Kabilan in விஞ்ஞானம்
163Shares
163Shares
lankasrimarket.com

சீனாவின் விண்வெளி நிலையம் டியாங்காங்-1, தனது கட்டுப்பாட்டை இழந்ததால் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் முதல் விண்வெளி நிலையமான டியாங்காங்-1 கடந்த 2016ஆம் ஆண்டு தனது கட்டுப்பாட்டை இழந்தது.

சுமார் 8.5 டன் எடை கொண்ட இந்த விண்வெளி நிலையம், தற்போது நாளொன்றுக்கு 525 அடி என்ற கணக்கில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்திலோ இந்த விண்வெளி நிலையம் பூமியை வந்தடையும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

எனினும் புவியின் காற்று மண்டலத்தை தாண்டி, அதிவேகமாக இவ்விண்வெளி நிலையம் வருவதால், கீழே விழும்போது முற்றிலும் எரிந்து சாம்பலாக வரும் என்று கூறப்படுகிறது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்