மனிதக் கலங்களினுள் புதிய வகை DNA: உறுதிப்படுத்தினர் விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

இதுவரை கண்டறியப்பட்டிராத புதிய வகை DNA (மரபணு) வகை ஒன்று மனிதக் கலங்களினுள் இருப்பதனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சிக்கல் தன்மை வாய்ந்ததும், சமச்சீர் வடிவம் உடையதுமான இம் மரபணு ஆனது இரட்டை சுருள் வடிவமைப்பில் காணப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவில் உள்ள Garvan எனப்படும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த மரபணு தொடர்பில் ஆய்வுகள் தொடர்ந்து வரும் நிலையில் அது ஏனைய மரபணுக்களைப் போன்று மனிதக் கலங்களில் முக்கிய பங்கினை வகிக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மரபணுவின் வடிவத்தினை எடுத்துக்காட்டும் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers