புவியின் மற்றுமொரு பிரதேசத்தில் வெற்றிகரமாக வாழ்ந்துவரும் துருவக்கரடிகள் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

தற்போது நிலவிவரும் காலநிலைச் சீர்குலைவுகள் காரணமாக துருவக்கரடிகளின் இருப்பானது பெரும் அச்சுறுத்தலுக்குள்ளானதொன்றாகவே பார்க்கப்படுகிறது.

ஆனாலும் தற்போது முன்னர் அறியப்பட்டிராத துருவக்கரடிகளின் (Ursus Maritimus) குடித்தொகையொன்று ஆர்ட்டிக்கின் சில பகுதிகளில் வாழ்ந்துவருகின்றமை உயிரியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அலஸ்கா மற்றும் ரஷ்யாவுக்கிடைப்பட்ட "Chukchi Sea" எனப்படும் பகுதியிலேயே இத் துருவக்கரடிகள் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும் இவை முற்றுமுழுதாக ஆபத்திலிருந்து விடுபட்ட இனம் எனக் கூறிவிடமுடியாது.

கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்விலேயே இவை தொடர்பான விடயங்கள் கிடைத்துள்ளதாக ஆய்வாளர் Eric Regehr கூறுகின்றார்.

இவற்றின் குடித்தொகை 25 ஆண்டுகளுக்கு முன்னர் காணப்பட்டதிலும், கடந்த 2008 - 2016 க்கிடைப்பட்ட காலங்களில் நல்ல ஆரோக்கிய நிலையில் காணப்பட்டிருந்ததாக ஆய்வாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

இக் கரடிகள் கிட்டத்தட்ட ஒரு மாத காலப்குதியை கடல் பனி மீது கழிப்பதாகச் சொல்லப்படுகிறது.

இவ் வாழிடம் வேட்டையாடுவதற்கும், இனம்பெருகுவதற்கும், இடம்பெயர்வதற்கும் துருவக்கரடிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது.

மிக அண்மையாகப் பெறப்பட்டிருந்த தகவல்களின்படி கிட்டத்தட்ட 3,000 தனியன்கள் இவ் உப குடித்தொகையில் அறியப்பட்டிருக்கின்றன.

உலகளவில் மொத்தமாக 26,000 துருவக்கரடிகளும், 19 உப குடித்தொகைகளும் உள்ளன.

இத் துருவக்கரடிகள் IUCN செந்தரவுப் புத்தகத்தில் ஆபத்துக்குள்ளான விலங்குகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவற்றில் சில உப குடித்தொகைகள் மற்றையதிலும் பார்க்க மிக விரைவாக அழிவடைந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers