ஒளிரும் எலும்புகளைக் கொண்ட தவளை இனம்: விஞ்ஞானிகள் வெளியிட்ட வினோத தகவல்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

இரவு நேரங்களில் ஒளிரக்கூடிய எலும்புகளைக் கொண்ட தவளை இனம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இத்தவளைகள் நச்சுத்தன்மை உடையவை என கண்டறியப்பட்டுள்ளது.

பிரேஸிலில் உள்ள அட்லான்டிக் வனப் பகுதியிலேயே இவ் வினோத இனத் தவளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மனிதக் கண்ணிற்கு மாத்திரமே இவ்ஒளிர்வு தெரியும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் சாதாரண வேளைகளில் இவ் ஒளிர்வினை பார்வையிட முடியாது எனவும், கழி ஊதாக் கதிர்களைகளை பரப்புவதன் ஊடாகவே கண்காணிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இத் தவளைகளின் காதில் நடு எலும்பு காணப்படாமையினால் ஒரு தவளை எழுப்பும் ஒலியை மற்றைய தவளைகளால் கேட்பது கடினம் என குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் இத் தவளைகள் குறித்த ஒளியைக் கொண்டு மற்றைய தவளைகளுக்கு சமிக்ஞை அனுப்புகின்றன என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்