கொரோனா வைரஸினை கொல்லக்கூடிய புதிய மாஸ்க் உருவாக்கம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அதிநவீன மாஸ் ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.

இந்த மாஸ்க் ஆனது மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி கொரோனா வைரஸினை அழிக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

மொபைல் போன்களின் சார்ஜரைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வெப்பத்தின் மூலம் இவ்வாறு கொரோனா வைரஸினை அழிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இச் செயற்பாடுகள் அனைத்தும் வெறும் 30 நிமிடங்களிலேயே நடைபெற்றுவிடும்.

எனினும் சார்ஜரில் இணைக்கப்பட்டுள்ளபோது குறித்த மாஸ்க்கினை அணிந்திருக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண செல்போன்களின் சார்ஜரை இணைக்கக்கூடிய வகையிலான USB துறையினை கொண்டுள்ள இம் மாஸ்க் ஆனது கார்பன் பைபர் படையினைக் கொண்டுள்ளது.

இதனால் 70 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை தாங்கக்கூடியதாகவும் இருக்கின்றது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்