Ryugu விண்கல் தூசு தொடர்பான முதலாவது புகைப்படத்தை பூமிக்கு வெளியிட்டது ஜப்பான்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
11Shares

அண்டவெளியில் உள்ள Ryugu எனப்படும் விண்கல்லினை ஆய்வு செய்வதற்கு ஜப்பான் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விண்கலத்தினை விண்ணிற்கு அனுப்பியிருந்தது.

இந்நிலையில் "Hayabusa-2 " எனும் குறித்த விண்கலமானது ஏற்கணவே Ryugu விண்கல் தொடர்பான படங்களை பூமிக்கு அனுப்பியிருந்தது.

எனினும் முதன் முறையாக குறித்த விண்கல்லில் காணப்படும் தூசு தொடர்பான படத்தினை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதனை ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான JAXA தற்போது வெளியிட்டுள்ளது.

இதேவேளை Hayabusa-2 விண்கலமானது பூமியிலிருந்து விண்ணில் பாய்ந்ததிலிருந்து இதுவரை சுமார் 300 மில்லியன் கிலோ மீற்றர்கள் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்