பாகிஸ்தான் மீது எந்த நேரத்திலும் இந்தியா தாக்குதல் நடத்தலாம்: எல்லையோர மக்களுக்கு எச்சரிக்கை

Report Print Arbin Arbin in தெற்காசியா
310Shares
310Shares
ibctamil.com

பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதலை மேற்கொள்ள இந்திய ராணுவத்தினர் தயாராகி வரும் நிலையில், எந்நேரத்திலும் ராணுவத்தினர் இத்தாக்குதலை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் இந்தியா–பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் இதை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி இந்திய எல்லைகளை குறிவைத்து தானியங்கி ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகளால் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணகாதி பகுதியில் கடந்த மே 1 ஆம் திகதி காலையில் இந்திய எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் திடீரென தாக்குதலை தொடுத்தது.

இந்த தாக்குதலில் பலியான 2 இந்திய வீரர்களின் உடல்களில் சிதைத்த பாகிஸ்தான் ராணுவத்தினர், அவர்களின் தலையையும் வெட்டி கொடூர செயலில் ஈடுபட்டனர்.

இதற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இதற்கு தக்க மற்றும் அதிதீவிரமான பதிலடி கொடுக்கப்படும் என ராணுவ தளபதி பிபீன் ராவத் தெரிவித்துள்ளார்.

மேலும் தாக்குதல் திட்டம் குறித்து விளக்க ராவத் மறுத்துவிட்டார். இந்நிலையில், பாகிஸ்தான் மீது அதிரடி நடவடிக்கையில் ஈடுபட இந்திய வீரர்கள் முடிவெடுத்துள்ளதாகவும், எந்நேரத்திலும் அதிரடியாக பாகிஸ்தான் எல்லையில் நுழைந்து இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்துவார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக எல்லையோர மக்களை அப்பகுதியில் இருந்து பத்திரமாக வேறு பகுதிக்கு மாற்றும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments