கணவனை அரிவாளால் வெட்டி நிர்வாணப்படுத்தி கொலை செய்தது ஏன்? சினிமாவை மிஞ்சிய மனைவியின் வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

சேலம் மாவட்டத்தில் தே.மு.தி.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கள்ளக்காதலை கண்டித்ததால் கூலிப்படையை ஏவி கொன்றதாக கைதான மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கலியமூர்த்தி என்பவர் தே.மு.தி.க.கிளை செயலாளராக இருந்து வருகிறார், இவரது மனைவி ஆலயமணி(40), மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.

தோட்டத்து வீட்டில் தங்கியிருந்த கலியமூர்த்தி உடல் முழுவதும் பலத்த வெட்டு காயங்களுடன் நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார்.

இந்த கொலை சம்பவத்தில் கூலிப்படையினர் ஹரிகிருஷ்ணன் (19), 17 வயது சிறுவன் ஆகியோர் போலீசாரிடம் வசமாக சிக்கினார்கள். அவர்கள், கலியமூர்த்தியை கொலை செய்வதற்கு தேன்குமார் எங்களை அழைத்து சென்றார்.

மேலும் ஆலயமணி எங்களுக்கு ரூ.1 லட்சம், சரக்கு ஆட்டோ ஆகியவை தருவதாக கூறினார் என பொலிசிடம் தெரிவித்துள்ளனர்.

கைதான மனைவி ஆலயமணி பொலிசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். நான், மகளிர் சுய உதவிக்குழுவில் இருக்கிறேன். இதனால் கடன் வி‌ஷயமாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தபோது விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, ஏமாந்தேர் கிராமத்தை சேர்ந்த சுற்றுலாவேன் டிரைவர் தேன்குமாருடன் (32) பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. ஏமாந்தேர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம்.

இதுபற்றி தெரியவந்ததும் கலியமூர்த்தி என்னை கண்டித்தார். மகளிர் சுய உதவிக்குழுவில் இருந்து தேன்குமாருக்கு எடுத்து கொடுத்த பணத்தை வாங்கி தருமாறு கேட்டு என்னை துன்புறுத்தினார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். அதன்படி தேன்குமாரின் உதவியுடன் கூலிப்படை ஏவி கணவனை செய்தேன்.

கூலிப்படையை சேர்ந்த 2 பேரும் வீட்டுக்குள் சென்று எனது கணவர் கலிய மூர்த்தியை அரிவாளால் வெட்டியும், குத்தியும் கொலை செய்தனர்.

அவர் அணிந்திருந்த ஆடைகளை அவிழ்த்து எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று ஏமாந்தேரியில் உள்ள ஒரு குளத்தில் கொலைக்கு பயன்படுத்திய கத்திகளை தூக்கி வீசினார்கள். பின்னர் குளத்தின் கரையில் ஆடைகளை போட்டு தீ வைத்து எரித்தனர் என கூறியுள்ளார்.

தற்போது, குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்