60 வயது நபரின் கண்ணில் இருந்த புழு! அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்: வெளியே எடுத்த வீடியோ

Report Print Santhan in தெற்காசியா

இந்தியாவில் 60 வயது மதிக்கத்தக்க நபரின் கண்ணின் சுமார் 15 செ.மீற்றர் நீளத்திற்கு புழு இருந்ததால், அதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்க நபர் ஒருவர் கண்களில் தொடர்ந்து எரிச்சல் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது ஒரு கண்ணில் சுமார் 15 செ.மீற்றர் நீளம் கொண்ட புழு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது அவருடைய கண்களில் இருந்தால், பார்வைக்கு ஆபத்து என்பதால், அதை உடனடியாக அகற்றிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நபர் யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.

மேலும் இது கொசு மூலம் பரவியிருக்கலாம் என்று கூறபப்டுகிறது.

இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், அவரது கண்களில் இருக்கும் அந்த புழுவை உடனடியாக நீக்காவிட்டால், அது அவரது கண்ணிற்கு ஆபத்தாக மாறிவிடும்.

அவரது கண்களிலிருந்து புழுக்கள் நகர்வதால், அதை அவ்வளவு எளிதில் அகற்றிவிட முடியாது. மேலும் அவரது கண்களில் இருக்கும் இரத்ததில் புழுக்கள் இருப்பது போன்று தெரிவதால், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்