காதலனை திருமணம் செய்ய வீட்டை விட்டு ஓடி வந்த 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி! பொலிசாரிடம் கண்ணீர் விட்ட பரிதாபம்

Report Print Santhan in தெற்காசியா

இந்தியாவில் காதலனை சந்தித்து திருமணம் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய 15 வயது சிறுமி ஒருவர் ஆட்டோ டிரைவர் மற்றும் அவருடைய நண்பனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் லுகியானாவின் Kila Mohalla பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 3-ஆம் திகதி தன்னுடைய காதலனை திருமணம் செய்வதற்காக வீட்டில் இருந்து 1500 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு, டெல்லி சென்றுள்ளார்.

டெல்லி செல்வதற்காக இரயில் ஏறிய போது, அவர் தெரியாத விதமாக தவறான இரயிலில் ஏறியதால், அவர் Ferozepur-ல் வந்திறங்கியுள்ளார்.

அப்போது இரவு நேரம் என்பதால், அங்கிருந்த ஒருவர் அந்த சிறுமிக்கு உதவியதால், அந்த சிறுமி அன்றைய இரவு அவரின் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார்.

அதன் பின் மறுநாள் காலை Ferozepur-லிருந்து டெல்லி செல்வதற்காக Amritsar சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த ஆட்டோ டிரைவரிடம் டெல்லி செல்வதற்கு இரயில் எப்போது என்று கேட்ட போது, அந்த ஆட்டோ டிரைவர் இப்போது இரயில் கிடையாது. நாளை காலை தான் இருக்கிறது என்று கூற, உடனே அந்த பெண் எனக்கு இங்கு யாரும் தெரியாது, இன்று ஒரு இரவு மட்டும் தங்க இடம் கிடைத்தால் போதும் என்று கூறியுள்ளார்.

இதை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட ஆட்டோ டிரைவர் அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, உடன் தன் நண்பனையும் அழைத்துச் சென்று அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அதன் பின் அந்த சிறுமியிடம் இதைப் பற்றி வெளியில் சொல்லக் கூடாது என மிரட்டி, லுகினியாவிற்கு செல்லும் பேருந்தில் அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து அந்த சிறுமி காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க பொலிசார் அந்த நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களில் ஆட்டோ டிரைவரின் பெயர் ஷகிப் சிங் எனவும், உடன் வந்த நண்பனின் பெயர் பாபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த சிறுமி திருமணம் செய்ய நினைத்திருந்த நபரின் பெயர் ஷகில் என்று அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers