அய்யோ என்னை சாகடிக்கிறாங்க... எங்கம்மா இருக்க? கதறும் சிறுவனைக் கண்டு சிரிக்கும் இளைஞர்களின் வீடியோ

Report Print Santhan in தெற்காசியா

தமிழகத்தில் விளையாட்டிற்கு என்ற பெயரில் சிறுவனை வைத்து இளைஞர்கள் செய்த செயலின் வீடியோவிற்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

சமூகவலைத்தளமான டிக் டாக்கில் பலரும் தங்களின் திறமையை காட்டி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்று டிக் டாக்கில் மிகவும் வைரலானது.

அதில் சிறுவன் ஒருவனை ஊரின் ஒதுக்குபுறமாக இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று அவனை விளையாட்டிற்கு மிரட்டுவதற்காக, கார் ஒன்றில் உன்னை அழைத்து செல்வார்கள், நீ சத்தம் போடாமல் இருக்க வேண்டும் என்று இளைஞர்கள் கூறுகின்றனர்.

அதற்கு அந்த சிறுவன் அய்யோ அண்ணா வேண்டாம் என்றும், பணம் எவ்வளவு கேட்டாலும் தருகிறேன், அம்மா எங்க இருக்க வந்து காப்பாற்று என்று கதறும் போது, அந்த இளைஞர்கள் சிரிக்கின்றனர்.

இந்த வீடியோவைக் கண்ட பலரும் சிரிப்பது தொடர்பான கமெண்ட்களை பதிவு செய்து வரும் நிலையில், சிலர் இது மிகவும் மோசமானது இப்படி எல்லாம் செய்யக் கூடாது, லைக்குகள், கமெண்டிற்காக இப்படியெல்லாமா செய்வது என்று கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers