கங்கா ஸ்னானம் ஏன் தெரியுமா?

Report Print Aravinth in ஆன்மீகம்
84Shares
84Shares
ibctamil.com

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானதாக தீபாவளி பண்டிகை அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

அஞ்ஞானம் என்னும் `இருள்’ மறைந்து மெய்ஞானம் என்னும் `ஒளி’ பிறப்பதை உணர்த்தும் வகையில் அதிகாலையில் இருள் மறைந்து வெளிச்சம் தோன்றும் போது இந்தப் பண்டிகையை கொண்டாடுவதன் பொருள் நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா அழித்த நேரம் அதிகாலை என்பதால் தீபாவளி திருநாளை அதிகாலை கொண்டாடுகிறோம்.

இந்த அற்புதமான தினத்தில் அதிகாலை கங்கா ஸ்னானம் கண்டிப்பாக செய்ய வேண்டும் அவ்விதம் செய்யாவிடில் நரகத்தைக் கொடுக்ககூடிய பாவம் சேரும் என்றும் தர்ம சாஸ்திரம் கூறுவதாக பெரியோர்கள் சொல்வதுண்டு.

கங்கா ஸ்னானம் என்பது என்னவென்று தெரியுமா?

கங்கா ஸ்னானம் என்பது தீபாவளியன்று நமக்கு இருவிதமான குளியலை செய்யும்படி சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

அன்று வெந்நீரில் அதிகாலைப் பொழுதில் ஓரு முகூர்த்த நேரம் கங்கை நதியே இருப்பதாக ஐதீகம்.

அதனால், அந்த நேரத்தில் எண்ணைய் ஸ்நானமாக வெந்நீரில் குளிக்க வேண்டும். அப்போது, நரகாசுரன், சத்திய பாமா, கிருஷ்ணர், பூமாதேவி நினைவு நமக்கு வரவெண்டும். இதற்கு “கங்கா ஸ்நானம்“ என்று பெயர்.

நல்ல எண்ணெயில் லட்சுமியும், குளிப்பதற்கு பயன்படுத்தும் வென்னீரில் கங்கா தேவியும், உடலில் தேய்க்கப்படும் எண்ணெயைப் போக்குவதற்காக பயன்படுத்தும் சீயக்காய்த் தூளில் வாயு பகவானும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இந்த கங்கா ஸ்னானத்தினை காலை 8.30 மணிக்கு முன்பும் மாலை 5.00 மணிக்கு பின்பும் எண்ணெய் தேய்த்து நீராடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

ஆகவே அதிகாலை 3 மணியில் இருந்து 6 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பது சாஸ்திரமாகும்.

இந்த கங்கா ஸ்னானம் செய்வதால் சனிஸ்வர பகவானின் பிடியில் இருந்தும் தப்பிப்போம். தரித்திரமும் நீங்கும். துஷ்ட சக்தியை விரட்டும் பட்டாசு வெடிப்பதால் துஷ்டசக்திகள் விலகும்.

மேலும், கங்கா ஸ்னானம் முடிந்தவுடன் வாழ்வை வெளிச்சமாக்கும் தீப ஒளி. தீப திருநாள் அன்று இல்லத்தில் விளக்கு ஏற்ற வேண்டும். நம் வீட்டு பூஜை அறையில் 5, 9 என்ற எண்ணிக்கையில் விளக்கு ஏற்ற வேண்டும். இதனால் தெய்வங்கள் மகிழ்ச்சியடையும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments