வெள்ளிக்கிழமைகளில் இதை செய்தால் செல்வம் கொட்டுமாம்

Report Print Kavitha in ஆன்மீகம்
1112Shares
1112Shares
ibctamil.com

சாத்திரங்களும் சம்பிரதாயங்களும் நம் முன்னோர்கள் உருவாகியதே இதை இன்று வரை எல்லோரும் கடைப்பிடித்து வருவது உண்டு.

பணக்கஷ்டங்கள் தீரவும் செல்வம் வீட்டில் நிலையாக இருக்கும் சில எளிய முறையினை பார்ப்போம்.

வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து குடும்பத்தினர் தொடர்ந்து சாப்பி்ட்டு சாப்பிடவும். வர குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும்.

வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.

பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரவு வரும்.

வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.

வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும்.

பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும். 45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.

மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபட்டு வந்தால் செல்வ வரவு உண்டாகும்.

வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.

முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நீரில் ஊற வைத்து பின் அதனை மறுநாள் பறவைக்கே அல்லது பசுவிற்கு அளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடை நீங்கி செல்வம் பெருகிடும்.

ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்கள் குமியும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்