ஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கையில் தமிழர்களை மட்டும் குறிவைத்தது ஏன்? அம்பலமாகும் அதிரவைக்கும் பின்னணி

Report Print Arbin Arbin in இலங்கை

இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தமிழ் கிறிஸ்தவர்களை மட்டும் துல்லியமாக இனம்கண்டு தாக்குதல் முன்னெடுத்துள்ளதன் பகீர் பின்னணி அம்பலமாகியுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹொட்டல்களில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.

இதில் இதுவரை 359 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 500-கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

ஆனால் இந்த கொலைவெறித் தாக்குதலானது, ஏன் தமிழ் கிறிஸ்தவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்ற கேள்வி தற்போது சர்வதேச அளவில் பரவலாக எழுந்துள்ளது.

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பானது தற்போது எந்த நாட்டில் இருந்து இயங்குகிறது என்ற உத்தியோகப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இருப்பினும், இலங்கையில் தாக்குதல் நடந்த 52 மணித்தியாலங்களுக்கு பின்னர் அந்த அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது முதல் சந்தேகம் என்கின்றனர் நிபுணர்கள்.

மேலும் சிங்கள கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள் இலங்கையின் முக்கிய பகுதிகளில் பரவலாக காணப்பட்டாலும்,

குறித்த தாக்குதலானது துல்லியமாக தமிழ் கிறிஸ்தவர்கள் பெருவாரியாக காணப்படும் 3 தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

இது சிங்கள பேரினவாதத்தால் மட்டுமே தமிழர்களை துல்லியமாக இலக்கு வைக்க முடியும். மட்டுமின்றி, கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் கிறிஸ்தவர்கள்.

மேலும், குறித்த தாக்குதலை திட்டமிட்டு ஒருங்கிணைத்திருப்பது வெளிநாட்டு சக்திகள் அல்ல, உள்நாட்டில் அடுத்த கட்ட நகர்வுகளை முடிவு செய்யும் சக்தி மிகுந்த கரங்களின் ஆதரவுடன் இது நடத்தப்பட்டுள்ளது.

மட்டுமின்றி குறித்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு முன்னெடுக்க இருப்பதாக அமெரிக்கா முன்னரே எச்சரித்துள்ளதாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதிகளின் நகர்வுகளை கூர்ந்து கவனித்துவரும் நாடுகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முக்கியமானவை.

ஆனால் அமெரிக்கா இந்த விவகாரத்தை மறுத்திருப்பது, குறித்த தாக்குதலை திட்டமிட்டு ஒருங்கிணைத்திருப்பது, ஆட்சி அதிகாரம் பொருந்தியவர்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சுமார் 30 ஆண்டு காலம் உள்நாட்டு போரை நடத்தி, உலகின் வல்லரசு நாடுகளைவிடவும், உளவு சேகரிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை கையாளும் திறனில் உச்ச கட்டமைப்பை கொண்ட நாடு இலங்கை.

அங்கே இதுபோன்ற தாக்குதல் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அவர்கள் சார்ந்தவர்கள் திட்டமிட்டு நடத்தியதாகவே அனுமானிக்கப்படும்.

மேலும் இலங்கை ராணுவ பிரிவுக்குள் முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்களின் பங்கேற்பு இல்லாமல் இந்த கொலைவெறித் தாக்குதல் நடந்திருக்க வாய்ப்புகள் இல்லை எனவும் கூறப்படுகிறது.

இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இடையே பகையை உருவாக்குவதில் முனைப்பு காட்டப்பட்டாலும், அதில் சிங்கள கிறிஸ்தவர்கள் பெருவாரியாக பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற திட்டமும் இந்த தாக்குதலில் அம்பலமாகியுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்